ஒரு ஓட்டில் காங்கிரஸ் தோல்வி அதிமுக வெற்றி ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு.
சென்னை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி 10 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கட்சி கூட்டணியும், திமுக கூட்டணியும் நீயா நானா என்று வெற்றி தோல்வி நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுந்தரி மற்றும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் மணி செல்வி இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மணி செல்வி - 1151 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுந்தரி
1வாக்கு வித்தியாசத்தில் -1152 பெற்று பெற்றார் என அறிவிக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.