ஜோலார்பேட்டை அருகே மூதாட்டி கழுத்திலிருந்த 6 சவரன் தங்க நகை பறிப்பு பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை.

ஜோலார்பேட்டை அருகே மூதாட்டி கழுத்திலிருந்த 6 சவரன் தங்க நகை பறிப்பு பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த  முனீஸ்வரன் கோயில் அருகில்  சாலையோரம் நின்று கொண்டிருந்த பத்மாவதி என்ற மூதாட்டியிடம் அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்க நகையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கச் செயினை பறித்துக் கொண்டு பரந்து உள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் சங்கிலி பறிப்பு குறித்து வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த  அந்த மர்ம நபர்கள் யார் ? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை சாலை ஓரம் உள்ள கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் அந்த மர்ம ஆசாமிகள் யார் என்ற கோணத்தில் கேமராக்களின் பதிவை  வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பட்டப்பகலில் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


tamilsudarr.page


செய்தி- கோவி.சரவணன்..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image