வாணியம்பாடி நகர காவல் நிலைய வளாகத்தில் காய்கறி தோட்டம். ஆய்வாளர் சந்திரசேகரன் ஆர்வம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன். இவர் நகர காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல் நிலையத்தை தூய்மையாக இருக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காவல் நிலைய வளாகத்தில் காலியாக உள்ள இடத்தை சுத்தம் செய்து அதில் வெண்டக்காய், கத்திரிக்காய், தக்காளி போன்றவை வைத்து தோட்டம் அமைத்துள்ளார். காவல் நிலையத்தில் பணி செய்து கொண்டு ஆர்வத்துடன் பயிர் செய்யப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீர் பாயிச்சி வருகிறார். காவல் நிலைய துணை ஆய்வாளர்கள் விஜயகுமார், குமார் மற்றும் சில காவலர்கள் இவருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். ஆய்வாளரின் விவசாயம் மீது உள்ள ஆர்வத்தை பார்த்து உடன் பணியாற்றிவரும் துணை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.