திருப்பத்தூர் அருகே செயற்கை மணலுக்காக மின்சாரம் மற்றும் கனிமங்கள்  திருட்டு.  மணல் மாபியாக்களுக்கு துணை போகும்   அதிகாரிகள்.

திருப்பத்தூர் அருகே செயற்கை மணலுக்காக மின்சாரம் மற்றும் கனிமங்கள்  திருட்டு.  மணல் மாபியாக்களுக்கு துணை போகும்   அதிகாரிகள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் தாலுக்காவில் இருந்து  திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் காகங்கரை, நத்தம், அவலநாயக்கன்பட்டி, கிருஷ்ணாவரம் போன்ற பகுதிகளின்  வழியாக  துலா நதி  ஆற்றில் ஒரு காலத்தில் தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக 17 ஆண்டுகளுக்கு முன்பு வந்த தண்ணீர் இன்று அந்த ஆற்றில் வனம் பார்த்த பூமியாக உள்ளது. இதற்கு காரணம் அந்த பகுதிகளில் நாள்தோறும் தங்குதடையின்றி திருடப்படும்  மணல் கொள்ளை ஆகும். கடந்த 17 ஆண்டுகளாக துலா நதி ஆற்றங்கரை பகுதிகள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம்  அரசியல்வாதிகள் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்கள் தான் என  காகங்கரை  பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டு வைக்கிறார்.


இதுகுறித்து அவர் கூறுகையில்.


இந்த துலாநதி ஆற்றில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீர் தேன் போல் சுவையாக இருக்கும். ஆனால் தற்போது ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் துணையுடன் துலாநதி ஆற்றில் அதிகளவில் நாள்தோறும் மணல் திருட்டு தங்குதடையின்றி மணல் திருட்டு நடைபெற்றுவருகிறது. இதற்கு  வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் துணை போகும் செயல்  மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். தொடர்  மணல் திருட்டால் துலாநதி என்ற   ஆறே  இல்லாத சுவடுகளாக தற்போது   காட்சியளிக்கின்றன. குறிப்பாக நூதன முறையில்  விவசாய நிலங்களில் செயற்கை மணல் தயாரிக்கும் தொட்டிகள் அமைத்து அதற்கு தேவையான மண்களை  விவசாயம் செய்யக்கூடிய விவசாய நிலத்தில் சுமார் 50 அடி அளவிற்கு ராட்சத இயந்திரங்கள் கொண்டு கனிமங்கள் திருட்டு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எந்தவொரு பலனும் இல்லை. வருவாய் துறை அதிகாரிகள் பெயர் அளவிற்கு மட்டுமே ஒரு சில இடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் செயற்கை மணல் தயாரிக்க தொட்டிகள் அமைத்து அதற்கு தேவையான மண் மற்றும் மின்சார திருடப்பட்டு வருகிறது. இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீது   சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மணல் திருட்டு மற்றும் மின்சார திருட்டுக்கு  ஒரு விடிவுகாலம் நீதிமன்றத்தின் மூலம் வரும் என எதிர்பார்க்கிறேன் என  கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. tamilsudarr.page.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image