ஆலங்குடி அருகே உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டுக்கள்..
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் தவலைப்பள்ளம் சாலையில் செட்டியாபட்டி விலக்கு ரோடு உள்ளது ,இது அடர்ந்த காட்டுப்பகுதியாகும் ,இந்த இடத்தில் சாலைபோடும் ரோலர் வண்டியை ஓட்டிவந்த அதன் ஓட்டுநர் திடீரென்று வண்டியில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் அவருக்கு வலிப்புவந்து மூச்சு நின்றுவிட்டதை பார்த்த அந்த வழியாக சென்ற ஆலங்குடி தலைமை மருத்துவர் டாக்டர் மு.பெரியசாமி அவர்கள் உடனடியாக அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளித்து சுமார் அரைநேரம் போராடி அவர் உயிரை காப்பாற்றினார்.அந்த நபர் ஏற்கனவே கட்டியிருந்த செயற்கை பல் கழண்டு இருந்தது, இந்த நிலையில் அவரின் தொண்டுபகுதியில் அடைபட்டு இருந்த்து, மூச்சுக்குழாயில் சென்று அடைபடாமல் வெளியில் எடுத்து பெரிய உயிர் பாதிப்பும் தவிர்க்கப்பட்டது.மேலும் அவரை மேல் சிகிச்சைக்கு 108 வாகனம் மூலம் அழைத்துவர ஏற்ப்பாடுகளை செய்துவிட்டு, மருத்துவ ஆலோசனைகளையும் டாக்டர் மு.பெரியசாமி கூறினார்.இதுபற்றி மருத்துவர் கூறும்போது நடுக்காட்டில் ஒரு உயிரை காப்பாற்றியது மிகவும் மனநிறைவைத்தருகிறது,மேலும் அவர் மருத்துவ பரிசோதனைகள் செய்து அதன் பின் தக்க ஆலோசனைகளையும் ,மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இதுபோன்ற நேரங்களில் 108 உதவியை அருகில் இருப்பவர்கள் அனுகி உதவி செய்யவேண்டும் என்று கூறினார்.