குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாணியம்பாடியில் 5 நாள் தொடர் முழக்கப் போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பில் 5 நாள் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது இந்த போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அமர்வுகள் அமைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் ஒரு பகுதியினர் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த கூடாது என கோரி செல்போன் இலக்குகளை தங்கள் கையில் ஏந்தியவாறு அரங்கிலிருந்து வெளியேறி சென்றனர். இதனால் அங்கு ரோடு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி.சரவணன்- அரவிந்த்.