பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த போதை ஆசாமி தூக்கிட்டு தற்கொலை திருப்பத்தூர் அருகே பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்தோஷ் (25) இவருடைய உறவினரான விஜயன் இருவரும் பெரிய நிறுவனங்களில் இரும்புக் கூரை அமைக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த சந்தோஷ(25) அவரது உறவினரான விஜயன் மகளான ஐந்து வயது பெண் குழந்தையை பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது கத்த முற்பட்ட சிறுமியை வாயில் துணியை வைத்து அடித்துள்ளார். அதன்பிறகு சிறுமி அவரது பாட்டியிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அதிகளவு தனக்கு வலிக்கிறது என்று அழுதுள்ளது குழந்தை. உடனடியாக குழந்தையை பெற்றோர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி போலீசார் சந்தோஷத்தை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சிறிய மாமரத்தில் சந்தோஷ் அவருடைய சட்டையை கழட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தை தற்போது அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளது. மது போதையில் தான் செய்த தவறால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுவால் பல இளைஞர்கள் சீரழிவிற்கு இதுபோன்ற ஒரு சில உதாரணங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.