திருப்பத்தூர் அருகே மணல் திருட்டை தடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர் கருப்பு கொடி கட்டி குடியரசு தினத்தை புறக்கணித்து போராட்டம்.

திருப்பத்தூர் அருகே மணல் திருட்டை தடுக்க தவறிய அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர் கருப்பு கொடி கட்டி குடியரசு தினத்தை புறக்கணித்து போராட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம்  கந்திலி ஊராட்சி ஒன்றியம்  காக்கங்கரை நத்தம் கிருஷ்ணாபுரம் போன்ற பகுதியில் துலாநதி ஆற்றங்கரையில் நடைபெறும் தொடர் மணல் திருட்டை கண்டித்து அதே பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் என்பவர் பல முறை வருவாய் துறை மற்றும் காவல் துறையில் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி கடந்த மாதம் சென்னை தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்த மாநில காவல் துறையில் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் காவல்துறை தலைமை செயலகம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கவில்லை அதற்கு பதிலாக வேறு இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கியது. ஆனால் திருப்பத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  மற்றும் கந்திலி காவல்துறையினர் இனி அந்த பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறாத வகையில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் உறுதியளித்தனர் அதனை ஏற்றுக்கொண்ட வழக்கறிஞர் தனது உண்ணாவிரத முடிவை கைவிட்டார். அதையடுத்து துலாநதி ஆற்றங்கரையில் செயற்கை மணலுக்காக அமைக்கப்பட்டிருந்த தொட்டிகள் அனைத்தும் காவல்துறையினர் ராட்சச இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தினர். அதன் பின்னும் தற்பொழுது மீண்டும் அதே பகுதிகளில் செயற்கை  மணலுக்காக  தொட்டிகள் அமைத்து மீண்டும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம்   வழக்கறிஞர் சரவணன் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி  இன்று தங்கள்  வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் குடியரசு தினத்தை புறக்கணித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் தமிழ் சுடர்.


செய்தி ஆக்கம்- கோவி.சரவணன்..


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image