சொகுசு கார் பரிசு என கூறி  விவசாயிடம்  ஆன்லைனில் நூதன  மோசடி ஆலங்குடியில் பரபரப்பு..

சொகுசு கார் பரிசு என கூறி  விவசாயிடம்  ஆன்லைனில் நூதன  மோசடி ஆலங்குடியில் பரபரப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கே. வி கோட்டை ஊராட்சி பாத்திமாநகர் கிராமத்தைச் சேர்ந்தவர்  ஆரோக்கியம் மகன் ஆரோக்கியசாமி இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ஆரோக்கியசாமியின்   மொபைல் எண்ணிற்கு தீடீரென ஒரு  அழைப்பு வந்தது. அதில்  விழாக்கால பரிசாக 12.50. மதிப்புள்ள புதிய சொகுசு  கார்  ஒன்று பரிசாக உங்கள் மொபைல் எண்ணிற்கு ஆன்லைன் வர்த்தக மூலம் விழுந்துள்ளது, எனக்கூறி ஒரு  வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்துள்ளனர்.


இதைபெற்றுக்கொண்டு ஆரோக்கியசாமி  பணத்தை  ஆலங்குடி  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற  வங்கியில் 89.600 ரூபாய்  செலுத்தியுள்ளார். இதனையடுத்து  செல்போனில் தொடர்புகொண்ட எண்ணிற்கு பலமுறை  தொடர்புகொண்டும் இணைப்பு கிடைக்கவில்லை அதன்பின் தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்ட இருப்பது என்று ஆரோக்கியசாமி தெரியவந்தது.  இதையடுத்து ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் ஆலங்குடி உதவி ஆய்வாளர்  சிவக்குமார்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி  தான்  சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது புதுக்கோட்டை பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.. tamilsudarr.page


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image