திண்டுக்கல் கொடைரோடு அருகே காரும் காரும் மோதி விபத்து. ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி.
மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுக்கொண்டு இருந்தபோது தீடீரென யாரும் எதிர்பாராதவிதமாக அவ்வழியே சைக்கிளில் ஒரு முதியவர் சாலையை கடக்க முயன்று உள்ளார் அப்போது சொகுசு கார் தனது கட்டுப்பாட்டை இழந்து முதியவர் வேகமாக மோதியது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவரை கடந்து எதிரே உள்ள சாலையில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருநெல்வேலியை நோக்கி சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையப்பன், மைந்தன், ஜெயந்திலால்மணி, ஜெபக்கனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். இவர்கள் அணைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற கொடைரோடு மாவுத்தம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த மற்றொரு காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மைய நாயக்கனூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.