ஈரோட்டில் துணிகர சம்பவம்
கட்டட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போலிசார் விசாரணை.
ஈரோடு, மூலப்பாளையம் ,திருப்பதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 37) .கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.சசிகுமார் கோயம்புத்தூர் தங்கி கட்டிட ஒப்பந்த தொழிலை கவனித்து வந்தார். வாரத்திற்கு ஒரு நாள் ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்து தங்குவார். சசிகுமார் மகள் சென்னையில் தங்கி படித்து வருகிறார். எனவே பெரும்பாலும் சாந்தி மட்டும் வீட்டில் இருப்பார்.
இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை சென்னையில் உள்ள சாந்தியின் தாயார் இறந்துவிட்டார். இதையடுத்து இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங் கேற்க சாத்தி ,சசிகுமார் சென்னை சென்று விட்டனர். பின்னர் சசிகுமார் மட்டும் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்றுவிட்டார். சாந்தி சென்னையில் இருந்து உள்ளார்.
இந்நிலையில் சாந்தியின் வீட்டு பூட்டு உடைந்திருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சாந்திக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சாந்தி உடனடியாக சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 39 பவுன் நகை , 40 ஆயிரம் ரொக்கப் பணம் மட்டும் ஒரு லேப்டாப் திருட்டு போனது தெரியவந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள வீடுகள் வணிக நிறுவனங்களில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி
கேமராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.