போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார நிறைவுவிழா விருத்தாசலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா விருத்தாசலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைக்கவசம் அணிந்தும், உயிர் பாதுகாப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த இருசக்கர வாகனப்பேரணியில் காவல்துறையினர், ஓட்டுநர் பயிற்சிபள்ளி மற்றும் இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்பேரணி விருத்தாசலத்தில் முக்கிய வீதிகள் வழியாக வந்து பாலக்கரையில் நிறைவடைந்தது. இதில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.