புதுக்கோட்டை அருகே மயிலை வேட்டையாடிய 3 பேர் கைது. வனத்துறை விசாரணை.
இந்தியாவின் தேசிய பறவை என்று போற்றப்படும் மயில். தற்பொழுது கால மாற்றத்தின் காரணமாக காடுகளிலிருந்து அருகில் இருக்கும் வயல்வெளிகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் காடுகளில் வேட்டையாடும் நபர்கள் என கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த போலீசார் வைத்திருந்த சாக்குபையை சோதனை மேற்கொண்டதில் அந்த பையில் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் மயில்களை கொன்று ரோமங்கள் பிடுங்கப்பட்டு இறந்த நிலையில் 3 மயில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் மூன்று மயில் இறைச்சிகளையும் பறிமுதல் செய்து அன்னவாசல் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள நகரப்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் ஆறுமுகம்(26), சின்னையா மகன் பெருமாள்(25), பழனிவேல் மகன் மூர்த்தி(26) என தெரியவந்தது. இதனையடுத்து அவர்களையும் மற்றும் மயில் வேட்டைக்கு பயன்படுத்திய ஒரு நாட்டுதுப்பாக்கி, கைப்பேசி மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை புதுக்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மயில் வேட்டையாடிய மூன்று நபர்களையும் வனத்துறையினர் கைது செய்து இந்த மயில் வேட்டையில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது. மயில் இறைச்சிகளை எதற்காக பயன்படுத்தினார் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய பறவையான மயிலை வேட்டையாடிய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.