திருமயம் அருகே  அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்.

திருமயம் அருகே  அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 3 பேர் பலி. 10 பேர் படுகாயம்.


புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் சென்னையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த 10 வயது சிறுவன் கதிர் கௌஷிக் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருமயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்விபத்தில் காயமடைந்த 10 பேரையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள  மூன்று பேரில் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற இருவர் உடல்களையும் மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image