தேசியவாக்காளர் தினத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவ-மாணவிகள்..
பொதுமக்களின் வாக்குரிமையை உணர்த்தவேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் இன்று வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகையில் இன்று நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் கொடியசைத்து
தொடங்கி வைத்தார். பேரணியாக சென்ற 500, க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வாக்காளரின் உரிமை பற்றிய வாசங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். பின்னர் அங்கு ஆட்சியர், அதிகாரிகள் மாணவ, மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாணவ மாணவிகள் வண்ணக் கோலங்கள் வரைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.