*🐎புதன்கிழமை*
*இன்றைய (22-01-2020) ராசி பலன்கள்*
மேஷம்
தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் சாதகமாக அமையும். உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தேவையற்ற எண்ணங்களால் மனதில் குழப்பமான சூழல் உண்டாகும். புதிய செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமைய காலதாமதமாகும். மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை விமர்சிப்பதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : குழப்பமான நாள்.
மிருகசீரிஷம் : விமர்சிப்பதை தவிர்க்கவும்.
---------------------------------------
மிதுனம்
சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனத்தெளிவை அளிக்கும். வேலையாட்களிடம் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் மேம்படும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : மனத்தெளிவு கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு தோன்றி மறையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். முக்கிய முடிவுகளில் மன தடுமாற்றம் இன்றி நிதானமாக செயல்படவும். புதிய நபர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
சிம்மம்
வெளிநாட்டு பயணங்கள் சாதகமாக அமையும். கூட்டுத்தொழில் புரிபவர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் வரும். நிர்வாகத்தில் தனித்திறமைகள் வெளிப்படும். கால்நடைகளால் சில விரயங்கள் ஏற்படும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : இலாபம் கிடைக்கும்.
பூரம் : தனித்திறமை புலப்படும்.
உத்திரம் : ஆசிகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் நன்மை உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவுநிலை மேம்படும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். வாகனங்களால் இலாபம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : உறவுநிலை மேம்படும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். தாயாரை பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொருட்களை சேர்ப்பதற்கான சாதகமான நிலை உண்டாகும். சகோதரர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மூலிகையால் இலாபம் கிடைக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.
சுவாதி : மனக்கசப்புகள் குறையும்.
விசாகம் : சாதகமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நற்பலன்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : நற்பலன்கள் உண்டாகும்.
அனுஷம் : அன்பு அதிகரிக்கும்.
கேட்டை : பொருளாதாரம் மேம்படும்.
---------------------------------------
தனுசு
மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் புதிய இலக்கை நிர்ணயம் செய்வார்கள். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
மூலம் : சோர்வு உண்டாகும்.
பூராடம் : புதிய இலக்குகள் உருவாகும்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
எதிர்பாராத செலவுகளும், விரயங்களும் ஏற்படலாம். தொழில் சார்ந்த முயற்சிகளில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றி மறையும். புதிய முதலீடுகள் செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். மற்றவர்களுக்கு கடன் சார்ந்த உதவிகள் செய்யும்போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : விரயங்கள் ஏற்படலாம்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கும்பம்
பயணங்களின் மூலம் இலாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், மாற்றமும் உண்டாகும். மனை தொடர்பான செயல்பாடுகளின் மூலம் இலாபம் மேம்படும். திட்டமிட்ட செயல்பாடுகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : இலாபகரமான நாள்.
சதயம் : மாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
மீனம்
உழைப்புக்கு உண்டான ஊதியமும், செல்வாக்கும் கிடைக்கப்பெறுவீர்கள். சபைகளில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான முயற்சிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : முயற்சிகள் ஈடேறும்.
------------------------------------