புத்தாண்டையொட்டி கலாம் நியூ இயர் 2020 என்ற பெயரில் கலாம் கோல்டன் அவார்ட்ஸ் 4 பிரிவுகளில் 108 விருதுகள்..
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் நாயகன் பேட்டையில் கலாம் கனவு 2020 என்ற அமைப்பு மூலம் 108 விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு டாக்டர் ராஜேஷ் கலாம் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராக ஹாண்ட் இன் ஹாண்ட் நிறுவன மேலாளர்கள் பிரேம் ஆனந்த், மோகனவேல், சுதா மற்றும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி பேராசிரியை ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர் . உதவி இயக்குனர் ராஜபரணி முன்னிலை வகித்தார். கலாம் கனவு இந்தியா 2020 அமைப்பின் சார்பில் 2009 முதல் 2019 ஆண்டு வரை பல்வேறு கிராமங்களில் வறுமை ஒழிப்பு திட்டம், டாக்டர் கலாம் திட்டம் -10 ஆண்டுகள் - இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கலாம் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் . வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவரும் இலவசமாக கல்வி வேலைவாய்ப்பு பெற வேண்டும் . வறுமையில் உள்ள குடும்ப தலைவருக்கு வேலை 10 வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அளித்து ஏழ்மை நிலை அகற்ற வேண்டும் போன்ற திட்டங்களை வலியுறுத்தி ராஜபரணி சைக்கிள் பயணமாக டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திர மோதி இடம் அளிக்க உள்ளார். விழாவில் சிறப்பாக சமூக சேவை ஆற்றிய 108 நபர்களுக்கு கலாம் பெயரில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது..