ராஜபாளையத்தில் 20 சதவீத ஊதிய உயர்வு கேட்டு  வங்கி ஊழியர்கள் ஆர்பாட்டம்.

ராஜபாளையத்தில் 20 சதவீத ஊதிய உயர்வு கேட்டு  வங்கி ஊழியர்கள் ஆர்பாட்டம்.


விருதுநகர்  மாவட்டம் ராஜபாளையம்  பாரத ஸ்டேட் வங்கி முன்பு அனைத்து  வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் 20 சதவீத ஊதிய உயர்வு மற்றும்  வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை,  நிலுவைத்தொகை  2017 இல் இருந்து வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என‌  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  விருதுநகர்  மாவட்ட வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர்  ராஜூ தலைமையில்  வெற்றிவேல், சக்திவேல், உலகநாதன்,  ஆகியோர் முன்னிலையில்  17 வங்கிகளைச் சேர்ந்த  ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.இந்த ஆர்பாட்டத்தில் வருகின்றன  ஜனவரி  31 மற்றும் பிப்ரவரி 1ஆம்  தேதிகளில்  வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும்  வங்கி நிறுவனங்கள் நமது கோரிக்கைகள் மீது  செவி சாய்க்கவில்லை என்றால் வரும்  ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர்  காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டம் நடத்தப்படும் என  போராட்டக்குழு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image