திருப்பத்தூர் அருகே அடுத்தடுத்து 2வீடுகளில் திருட்டு சம்பவம் மக்கள் பீதி..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாதூர் பகுதி மோட்டூர் கிராமத்தில் வசித்து வரும் தங்கவேல் மனைவி கமலா (45) இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது பூட்டிய கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 400 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் 5 ஆயிரம் ரொக்க பணம் மர்ம நபர்களால் பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
அதேபோல் குரும்பர் வட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் மனைவி இந்திரா 31 வயது இவரது வீட்டில் 5 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் 350 கிராம் வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸார் திருட்டு குறித்து
வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து வீடுகளில் திருடு போன சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.