திருப்பத்தூர் அருகே பொங்கல் சாப்பிட 2 குழந்தைகள் பலி போலீசார் விசாரணை..
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35) வயது இவரது மணைவி பிரியா என்பவர்களுக்கு ஜெயஶ்ரீ (5) வயது மற்றும் தானுஶ்ரீ (3) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் பெற்றோர்கள் இவரது குழந்தைகளுக்கு பொங்கலையொட்டி சாமிக்கு படையல் செய்த பொங்கல் பிரசாதங்களை கொடுத்ததாகவும் இதனால் அவரது பெண் குழந்தைகள் ஜெயஸ்ரீ ( 5 ) தனுஸ்ரீ (3)சாப்பிட்ட உடன் வாந்தி எடுத்து எடுத்துள்ளனர்.
உடனடியாக இரு குழந்தைகளையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் வரும் வழியிலேயே இறந்துள்ளனர் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இறங்கியுள்ள
போலீஸாரின் கெடுபிடிக்கு விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகின்றன என தெரியவந்துள்ளது. உண்மையில் பொங்கல் சாப்பிட்டு குழந்தைகள் இறந்தா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணையில் காவல் துறை இறங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார் சம்பவ இடத்தில் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார். பொங்கல் திருநாளில் இரண்டு குழந்தைகள் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...