திருப்பத்தூர் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் தீயில் கருகி நாசம். 2லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகிலுள்ள தாதன் குட்டை பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி அண்ணாமலை (50). இவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது தீடீரென சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டது. உடனே அண்ணாமலை பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு தகவல் கொடுப்பதிற்குள்ள சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தீ வீடு முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. பின்னர் அருகில் உள்ள சின்னராஜ் என்பவர் வீட்டில் தீ பரவி தீப்பிடித்துக் கொண்டு எரியத் தொடங்கியது. அப்போது அருகில் இருந்த புளியமரமும் எரிய தொடங்கியது. இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் இரண்டு வீடுகளும் தீயில் கருகி பெரும் சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் அண்ணமலை வீட்டில் 1.25. லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. அதேபோல் சின்னராஜ் வீட்டில் 75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.