புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருசக்கர மோட்டார் வாகனத்தில் 1800 கிலோ மீட்டர் தூரம் பயணம்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 20-ம் தேதி முதல் 29ம் தேதி வரை இருசக்கர மோட்டார் வாகனத்தில் 1800 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்த இந்த பேரணி ரயில் நிலையம் சாலையில் இருந்து மாவட்ட பாஜக தலைவர் சேதுபதி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் ஏவிசி கணேசன், மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், வழக்கறிஞர் ஜெகதீசன், லாசர், பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இப்பேரணியில் கின்னஸ் சாதனைபடைத்த ராஜலட்சுமி நந்தா கலந்து கொண்டு சென்றார் புதிய பேருந்து நிலையத்தில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து உரிமை சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க உரையாற்றினார்
பிறகு புதுக்கோட்டை நகர முக்கிய பகுதிகள் வழியாக கந்தர்வகோட்டை சென்றனர் இந்த இந்த இருசக்கர மோட்டார் வாகன பேரணியில் சுமார் 100க்கும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..