ஈரோட்டில் பரப்பு சம்பவம்   லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தில் 5 பேர் கும்பல் கைது.
ஈரோட்டில்  பரபரப்பு சம்பவம்

  லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தில் 5 பேர் கும்பல் கைது.

 

 

ஈரோடு மாவட்டம்  கோபிபகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர்,  பங்காருபேட்டை பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் கோபி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக ஒரு லாரியும் ,ஆம்னி வேன் வந்தது.   அந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.  அப்போது லாரியிலும் ,வேனிலும் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது.பின்னர் லாரி ,வேனில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்  அம்மாபேட்டை  சித்தார்பகுதியைச் சேர்ந்த  சாம்சன் (வயது 49),  நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30),  அழுகுளி பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(32),  ஒட்டர் கரட்டுப்பாளையம்  பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(31),  சென்னை வெல்லூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (50)  ஆகியோர் என தெரியவந்தது.  

 இவர்கள் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தி செல்கிறார்கள்  என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும்  ஆம்னி வேனும், 12 டன் ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லாரிகள் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை படத்தில் காணலாம்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image