அதிமுக  எம்பி  பழனிசாமியை கைது செய்தது தமிழக காவல்துறை   11 பிரிவுகளில் வழக்குப்பதிவு.‌

அதிமுக  எம்பி  பழனிசாமியை கைது செய்தது தமிழக காவல்துறை   11 பிரிவுகளில் வழக்குப்பதிவு.‌


கோவை:


அதிமுக பற்றியும், இரட்டை இலை பற்றியும் அவதூறாக பேசியதாலேயே முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கே.சி. பழனிசாமி… அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். இப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து அக்கட்சியின் விசுவாசி. ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு அதிரடி காட்டும் நபர்.


யாரும் எதிர்பாராத வகையில் இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்று காலை 4 மணிக்கு சூலூரை சேர்ந்த காவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.


விசாரணையின் முடிவில் அவரை கைது செய்து சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இந்த கைது அதிமுகவில் உள்ள முக்கிய நபர்களுக்கே அதிர்ச்சியை தந்திருக்கிறது.


என்ன காரணம் என்று விசாரித்த போது, அதிமுகவின் புகாரின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விவரம் தெரிய வந்திருக்கிறது. அவர் இப்போது அதிமுகவில் இல்லை… கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.


ஆனால் தொடர்ந்து அதிமுக பற்றி பல தருணங்களில் பேசி இருக்கிறார். அதாவது தான் அதிமுகவில் இணைந்துவிட்டதாக கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு பேசக்கூடாது என்று அதிமுக தலைமையிடம் இருந்து பலமுறை அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதோடு, தொடர்ந்து அதிமுகவில் நீடிப்பதாக பேசியிருக்கிறார். மேலும், அதிமுக பெயரில் இணையதளம் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார்.


இதையடுத்து, சூலூரைச் சேர்ந்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவரான கந்தவேல் புகார் அளித்திருக்கிறார். அதன் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஒன்றல்ல, ரெண்டல்ல… மொத்தம் 11 பிரிவுகளில் பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலூர் காவல் நிலையத்தில் IPC பிரிவுகள் 417, 418, 419, 464, 465, 468, 479, 481, 482, 485 மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய 11 பிரிவுகளில் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதிமுக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த கைது நடவடிக்கை என முன்னாள் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 






Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image