விருத்தாசலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக எம்ஜிஆர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ..
கடலூர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் விருத்தாசலம் வானொலி திடலில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்
கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி பி முருகேசன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் நகர கழக செயலாளர் தியாக.ரத்தினராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளரும் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட கழக பொருப்பாளருமான கே எஸ் கே பாலமுருகன் கழகத்தினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், வருகின்ற சட்டமன்ற மன்ற தேர்தலில் அண்ணன் T.T.V தான் நிச்சயம் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக அமருவார் என்றும், மேலும் கழகத்தின் கொள்கைகளையும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
இதில் கழக பேச்சாளர்கள் அம்பேத்கர், திண்டிவனம் எத்திராஜ்,
கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் ராஜா பழனிவேல், கடலூர் வடக்கு மாவட்டம் அவைத்தலைவர் கேபி கலையரசன், இணை செயலாளர் அஞ்சுகம், வானூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்புச் செயலாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருத்தாசலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், விருத்தாசலம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், நல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை, கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், மங்களூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல், மங்களூர் திருக்கோடீஸ்வரர், செந்தில்குமார், மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் திருமலைவாசன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் கலைமணி, பண்ருட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், விருத்தாசலம் நகர கழக அவைத்தலைவர் பாரதி, இணைச் செயலாளர் ராஜ்குமார், இணைச் செயலாளர் சங்கர், துணை செயலாளர் ரமேஷ், துணை செயலாளர் வளர்மதி இணைச் செயலாளர் ஜோதி மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் மாவட்ட பிரதிநிதி வனிதா மாவட்ட பிரதிநிதி சாந்தி மாவட்ட பிரதிநிதி சக்கரபாணி பொருளாளர் ரகுராமன் நகர மகளிர் அணி விஜயா குணசேகரன் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் முன்னோடிகளும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு முன்பு நெய்வேலி வீரத்தாய் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் அம்மா பேரவை இணைச் செயலாளர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்.
செய்தி- கோவி.சரவணன்.. கடலூர்- காமராஜர்..