பழனி முருகன் மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முருகன் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி..
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் மலைக்கோயிலில் முருகப் பெருமான் ஞான தண்டாயுதபாணி சுவாமி ஆக விட்டிருக்கிறார் மூலவர் முருகன் சிலை ஒன்பது வகையான பாஷாணங்களால் ஆனது இச்சிலையை சித்தர் போகர் என்பவர் உருவாக்கினார் பழனி முருகன் கோயிலில் 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது அப்போது மூன்று வருடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்று 13 வருடங்கள் ஆகிறது இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதை ஒட்டி முருகன் மலைக்கோயில் மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இதை கோயில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார் முன்னதாக அவர் கோயில் வளாகத்தில் உரலில் அஷ்டபந்தன மருந்து நிறைந்த உருண்டைகளை உரலில் போட்டு இடித்து தொடங்கி வைத்தார் இதற்கு அஷ்டபந்தன மருந்து எட்டு பொருட்களால் ஆனது அவை வருமாறு கொமாருக்கு ஜாதிலிங்கம் குங்கிலியம் சுக்கான்மண் வென்பஞ்சு தேன்மெழுகு உள்ளிட்ட எட்டு பொருள்களால் ஆனது அஷ்டபந்தன மருந்து ஆகும் இந்த அஷ்டபந்தன மருந்து உருண்டைகளை தருமபுரம் ஆதீனத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தது இதனை உரலில் இட்டு இடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பழனி கோயில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திர பானு ரெட்டி உதவி ஆணையர் செந்தில்குமார் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை துணை ஆணையர் விஜயன் பழனி போகர் புலிப்பாணி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சாமிகள் ஜம்பு சாமிகள் சரவணப்பொய்கை கந்த விலாஸ் அதிபர் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், கட்டிட வல்லுநர் நேரு, அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், லோகநாதன், நகர செயலாளர் ஏ.ஓ.சுந்தரம், ஆகியோர் உள்ளனர்.