ஆலங்குடி அருகே  முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த  வாலிபர் கைது.

ஆலங்குடி அருகே  முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த  வாலிபர் கைது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி கிரா மத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவனேசன் இவர்  ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் வீரச்சிபலையத்தில்  உள்ள ப்ளூ பாலிமர் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில்  துணைமேலாளார் பதவியில் ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாகாளி என்பவரின் மகள் தங்கமணி தனது சொந்த ஊரில் உள்ள உறவினர்களுக்கு தெரியப்படுத்தாமல்  ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.அந்தத் திருமணத்தின் மூலம் சிவனேசன் மற்றும் தங்கமணி தம்பதியர்களுக்கு  ஐந்து வயதில்  மோனிஷா என்ற பெண் குழந்தை   பெருந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்நிலையில் மீண்டும் சிவனேசன் தாய் , தந்தையாரிடம்   தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.  அவர்களும்  ஆலங்குடி அருகேயுள்ள குலமங்கலம் தெற்கு பூக்காரன் தெருவைச் சேர்ந்த  மாசிலாமணி என்பவரது மகள் பிருந்தாதேவி என்ற   முதுநிலைப் பட்டதாரியை  கடந்த நான்கு மாதத் திற்கு முன் திருமணம்  செய்து வைத்தனர்.
இதில்  பெண் வீட்டார் சார்பில்  25 சவரன் தங்க நகைகள்,  ரூபாய் 5 லட்சம் ரொக்கமும் ,மற்றும் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள்  வரதட்சைனையாக கொடுத்துள்ளார்.
திருமணம் ஆன  ஒரு வாரகாலம் பிருந்தாதேவியுடன்  இருந்த சிவனேசன். மீண்டும் நான் பணிக்கு  சென்று வருவதாக கூறி சென்றவர். பல மாதங்கள் ஆகியும்   தன் சொந்த ஊராகிய சேந்தன்குடிக்கு  வரவில்லை. அதன்பின்  பிருந்தாதேவி சிவனேசனிடம் பலமுறை  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் நான் வந்து உன்னை கூட்டி செல்கிறேன் நீ அங்கே  அமைதியாக இரு என்று பல காரணங்களை கூறி வந்துள்ளார். இதனையடுத்து
சில நாட்கள் கழித்து பிருந்தாதேவிக்கு   நீ கல்லூரியில் சேர்ந்து நல்லா  படி  உன்னை நான்  பெரிய  பதவிகளில்  அமர வைக்க ஏற்பாடு  செய்கின்றேன்  என  கூறியுள்ளார்.  இதை நம்பாத பிருந்தாதேவி தனது குடும்பத்தினருடன் கணவர் சிவனேசன் பணிபுரியும்  இடத்திற்கு சென்று  விசாரிக்கும்போது  சிவனேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி   தங்கமணி என்ற மனைவியும் ஒரு குழந்தை இருப்பது தெரிந்தது. இதில்  அதிர்ச்சி அடைந்த  பிருந்தா தேவி   பெருந்துறை காவல் நிலையத்தில் தன்னை மோசடி செய்து திருமணம் செய்த சிவனேசன் மீது  புகார் அளித்தார். அதன்பேரில்  பெருந்துறை காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டு திருமணம் நடைபெற்ற இடம்  புதுக்கோட்டை   மாவட்டம் என்பதினால் இந்த வழக்கை  சம்பந்தப்பட்ட  ஆலங்குடி அனைத்து மகளிர் நிலையத்திற்கு பரிந்துரை செய்து  அனுப்பி வைத்தனர். அதன்பேரில்
ஆலங்குடி மகளிர் காவல்  ஆய்வாளர்  ஹேமலதா  சிவனேசனை கைது செய்து   முதல் திருமணத்தை மறைத்து   இரண்டாவது திருமணம் செய்த  குற்றத்திற்காக  சிவனேசன் மீது வழக்குபதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முதல் திருமணத்தை  மறைத்து பட்டதாரி பெணை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள்..


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image