தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது இருக்கட்டும், ராஜராஜ சோழனுக்கு எப்போது மணிமண்டபம் கட்டப்படும் என பொதுமக்கள் கேள்வி. 


தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது இருக்கட்டும், ராஜராஜ சோழனுக்கு எப்போது மணிமண்டபம் கட்டப்படும் என பொதுமக்கள் கேள்வி.


1000 ஆண்டுகளை கடந்து உலகிற்கே சவால் விட்டு கம்பீரமாக எழுந்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன். சிவபக்தரான ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவில் வழிபாடுகளை சமஸ்கிருத மந்திர உச்சரிப்புடன்தான் நடத்தியுள்ளார். அவர் காலம் தொட்டு இன்றுவரை அந்த கோவிலில் கும்பாபிஷேகம் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டு வருகிறது. இதுதான் அந்த கோவிலின் மரபு. ஆனால் தற்போது திடீரென முளைத்த தமிழ் ஆர்வலர்கள், தமிழை விற்று பிழைப்பு நடத்துபவர்கள், தமிழன் தமிழன் என்று வெறியை உருவாக்கி அதில் குளிர் காய்பவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், இந்துமத விரோதிகள், கிறிஸ்தவ மிஷினரிகள், முஸ்லிம் மதவெறி கும்பல்கள், இவர்கள் அனைவரும் சேர்ந்து தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இவர்களோடு மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் போன்ற இந்து விரோத சக்திகள் அனைத்தும் களமிறங்கியுள்ளன. இவர்களின் நோக்கம் தமிழை வளர்க்க வேண்டும் என்பது அல்ல. இந்து மதத்தை சீரழிக்க வேண்டும். இந்து மத வழிபாட்டு முறைகளை சீர்குலைக்க வேண்டும். அதன்மூலம் மதமாற்றத்திற்கு துணை போக வேண்டும். இதைத் தவிர இவர்களுக்கு வேறு எந்த சிறப்பு நோக்கமும் கிடையாது. மசூதியில் தமிழில் ஓத வேண்டும் என்று இவர்களில் ஒருவர் கூட கூறவில்லை. சர்ச்சுகளில் தமிழில் மட்டும்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஒருவர்கூட கூறவில்லை. பெயர் பலகைகள் தமிழில் மட்டும்தான் இடம்பெறவேண்டும், ஆங்கிலத்திலோ, உருதுவிலோ இடம்பெறக்கூடாது என்று இவர்கள் போராட இல்லை. தாங்கள் நடத்தும் பள்ளிகளில் உருது மொழியோ, இந்தி மொழியோ கூடாது என்று போராடவில்லை. உண்மையிலேயே இவர்களுக்கு தமிழின் மீது பற்றுதல் இருந்தால், இவர்களின் பெயரை முதலில் தமிழில் மாற்றலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர்களை தமிழில் மாற்றலாம். இவர்கள் நடத்துகின்ற நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்றலாம். இவர்கள் நடத்துகின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, தமிழில் மட்டுமே அமைக்கலாம். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை தவிர்க்கலாம். இவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை ஒழிக்கலாம், உருது போன்ற வெளிநாட்டு மொழிகளை ஒழிக்கலாம். இப்படி எத்தனை எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும் இதில் எதைப் பற்றியும் கவலைப்படாத இவர்கள், இப்போது திடீரென தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.  இது ஒருபுறம் இருக்க, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி எப்படி ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கி தலை குனிய வைக்கிறது என்பதை பார்க்கலாம்.
கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உடையாளூர். இங்குதான் மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி உள்ளது. ராஜராஜனின் சமாதி அமைந்துள்ள இடத்தில் சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. அதன் அருகில் 80 அடி தொலைவில் மேலும் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன.
கண்டவர்களுக்கெல்லாம் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தில், மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி, நமக்கு ரத்த கண்ணீரை வரவழைக்கிறது. கோபும் கட்டிய ராஜரான் சமாதி குடிசை போன்று உள்ளது.அதுவும் பராமரிப்பின்றி காணப்படுகிறது.இப்படி ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டும் என்று கொடி பிடிக்கின்ற இந்த கும்பல்கள், அந்த மாமன்னனின் சமாதிக்கு வாழ்நாளில் ஒருமுறைகூட செல்லாதவர்கள்தான். தமிழனுக்கு உலக அரங்கில் இன்று வரை வீர வரலாற்றை தந்து சென்ற மாமன்னனின் சமாதி நாதியற்று, கேட்பாரற்று கிடக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள். 


tamilsudarr.page.


செய்தி ஆக்கம்- கோவி.சரவணன்...






Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image