கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான சசி தரூர், பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய இருண்ட காலம் என்ற புத்தகம் 2019ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை பெற்றது.இந்நிலையில் சசி தரூரின் 'தி கிரேட் இந்தியன்' நாவல் என்ற புத்தகத்தில் நாயர் சமூக பெண்களை இழிவுப்படுத்தி எழுதியிருப்பதாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக சசி தரூருக்கு சம்மன் பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் நீதிமன்றத்தில் சசி தரூர் ஆஜராகாததால், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து கூடுதலை தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிரேட் இந்தியன் நாவல் என்ற புத்தகத்தின் முதல் பதிப்பு 1989ம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது..
காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் கேரளா மாநிலத்தில் பரபரப்பு.