திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஜெகன் மோகன் பேரவை சார்பில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம், பெண்களுக்கு இலவச சேலை வழங்குதல், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்குதல் என முப்பெரும் விழா ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் பாஸ்கர் , மாநில துணைத்தலைவர் பிரேம் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னதாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கோணாமேடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர்,ஜோசப் ஜாய், அருண் ரெட்டி,ஆகியோர் கலந்துகொண்டு
பெண்கள் சுமார் 500 பேருக்கு இலவச சேலைகள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 300 பேருக்கு இலவச சீருடை,மற்றும் அன்னதானம் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வாணியம்பாடியில் ஆந்திர முதல்வர் பிறந்தநாள் விழா.