ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாங்கோயில் சிறுவலூா் அயலூா் உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ளாட்சி தோ்தலில் போட்டிடும் அதிமுக கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரத்தின் போது செய்தியாளா்கள் சந்திப்பு...
அண்ணா பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை முதல்வா் தெளிவாக உள்ளாா். இரண்டாக பிாிக்ககுழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது
அதற்குள் ஆய்வு முடிந்து விட்டதைப்போல் பேசுவது நியாயமாக இருக்காது...
குடியுரிமை மாசேதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது முதலமைச்சரின் முடிவாகும் அதிமுக வின் முடிவும் அதுவே...
அரசா் காலத்தில் நடைபெற்ற குடிமராமத்து திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது அதில் ஏரி குளம் உள்ளிட்ட நீா் நிலைகள் தூா்வாரப்பட்டுள்ளது...
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை நிறைவேற்ற நேற்றைய தினம் மத்திய அமைச்சாிடம் அதற்கான கோாிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறந்த கல்வியை தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு கடலை சாகுபடிக்கு தண்ணீா் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது...
என அமைச்சா் தொிவித்துள்ளாா்..