சென்னை:
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து முடிவு செய்வதற்காக மாநில முதல்வர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கூட்டம் டெல்லியில் இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். இந்த கூட்டத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஜெயலலிதாவின் நீண்ட நாள் கோரிக்கையான இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து கோரிக்கை வைத்தார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்து இருப்பதால் அதிமுக சற்று உற்சாகமாக இருப்பதாக என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.