வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை முறைப்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் வசூல் செய்யவேண்டும். குறிப்பாக ராணிப்பேட்டை மற்றும் பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வேறுபடுகிறது. எனவே ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி வேலூர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் துண்டறிக்கை வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்கொண்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணத்தை முறை படுத்த கோரிக்கை பாமகவினர் துண்டு பிரசுரங்கள் விநியோகம்.