திருச்சி.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டை ஒன்றியத்தில் மகாதேவி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜெயராஜ் என்பவரது வீட்டின் முன்பு வளர்ந்துள்ள வேப்பமரத்தில் பால் வடிந்து வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்மணி அருள் வந்து ஆடி வேப்பமரத்தில் மாரியம்மன் வந்து இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பால் வடியும் வேப்ப மரத்திற்கு மஞ்சள், சந்தனம் , குங்குமம் பூசி அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் .பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் வேப்பமரத்தில் பால் வடிவதை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த வேப்ப மரத்தின் மேலே தெரியும் வேர்ப்பகுதி பாம்பு போல் நெளிந்து வளைந்து செல்வதால் பால்வடியும் வேப்பமரத்தை காணும் பக்தர்கள் அம்மனின் அவதாரம் என்றே இந்த மரத்தை கருதுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.