ராணிப்பேட்டை மாவட்டம் ஆயிலம்புதூரில் அப்துல் கலாம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், ஒன்றிணைந்து 50க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினருக்கு விருந்தளித்தனர். மேலும், விவசாயிகளுக்கு மண்வெட்டி, மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கி தலைப்பாகை கட்டி கெளரவித்தனர். ஆயிலம்புதூரில் விவசாயிகளுக்கு விருந்தளித்த அப்துல் கலாம் அமைப்பினர்விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட விவசாயிகளை பெரும்பாலும் யாரும் கௌரவமாகக் கருதுவதில்லை. இந்த சூழ்நிலையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு விருந்தளித்து கெளரவப்படுத்திய நிகழ்வு அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டையில் விவசாயத்தை பாதுகாக்க இளைஞர்கள் சார்பில் விவசாயிகளுக்கு விருந்து.
• தமிழ் சுடர் காலை நாளிதழ்