இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் முதல் பரிசை வென்ற தமிழகம்.


மத்திய அரசின் நிர்வாகத் சீர்திருத்தத்துறை இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் எது என்பதைது குறித்து   ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.இந்த ஆய்வு 18 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள், 11 வடகிழக்கு மற்றும் மலை பகுதி மாநிலங்கள் என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விவசாயம், தொழில் ஆகியவையும் இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்டன.இந்த ஆய்வு முடிவுகளின்படி நிர்வாகத்தில் சிறப்பாக திகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு போன்றவைகளில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.மகாராஷ்டிரா (5.40) 2வது இடத்திலும்,கர்நாடகா ( 5.10) 3வது இடத்திலும் சத்தீஸ்கர் (5.05) மற்றும் ஆந்திரா (5.05)  முறையே 4 மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளன.யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு மற்றும் மலை பகுதிகள் கொண்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தேசிய நல்லாட்சி தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை தொடர்ந்து மத்திய அமைச்சர்  ஜீதேந்திர சிங் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த தகவல்களை வெளியிட்டார்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image