தமிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற நடைபயணம் மேற்கொண்ட அதிமுகவினர்.


உலக நன்மை வேண்டியும் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலிலும்  மற்றும் வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும்  அதிமுக  அமோக வெற்றி பெற வேண்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு நடை பயணம் மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை அருள்மிகு மூலஸ்தம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட ஆன்மீக நடை பயணத்தை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் சால்வை அணிவித்து துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட ஆன்மீக பயணமானது வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், தேனி, குமுளி, வண்டிபெரியார், பம்பை வழியாக 20 நாட்களில்  650 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு சபரிமலை சன்னிதானத்தை சென்றடைந்தது அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..


Popular posts
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image