ஈரோடு அருகே முறையாக வார்டு வரையறை செய்யவில்லை என கூறி  உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.


கடந்த மாதம் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற இதர 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 27ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி  அய்யம்பாளையம் கலைவாணர் வீதியில்  உள்ள 362 வாக்காளர்களை 1வது மற்றும் 4வது வார்டாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் முறையாக வார்டு வரையறை செய்யாமல் தேர்தல் நடைபெறுவதால்  மீண்டும் 362 வாக்காளர்களை 1வது வார்டுக்கு மறுவரையரை செய்து தரகோரி மாவட்ட ஆட்சியர் இடமும், தேர்தல் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து   அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் இன்று நடைபெறும் இரண்டாம்கட்ட உள்ளாட்சித் தேர்தலில்  வாக்களிக்காமல் தங்கள் பகுதியில் பேனர் வைத்து நூதன முறையில் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image