இந்திய நாட்டின் சிறுபான்மை மற்றும் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்றினைந்து காஞ்சிபுரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே நடைபெற்றது. இதில் திமுக மற்றும் தோழமை கட்சிகளான இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி ,SDPI, இந்திய யூனியன் மக்கள் கட்சி ,தமிழக வாழ்வுரிமை கட்சி என அனைத்து கட்சியினர் மற்றும் இதில் இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.இஸ்லாமிய அமைப்பினர் பங்கேற்பு.