சென்னை:-
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்றுவிட்டது.
இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்.காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும்.
பொது மற்றும் தனியார் சுவர்களில் பிரச்சார விளம்பரம் செய்யத் தடை.தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.