ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் அருகே தமிழக சுற்றுலாத் துறை மற்றும் மத்திய சுற்றுலாத் துறை சார்பில் இந்திய நாட்டிய விழா நடத்தப்படுகிறது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கலாச்சாரங்களிலும் பிரபலமான நாட்டுப்புற நடனத்தின் பல்வேறு வடிவங்களைக் கொண்டாட இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்த நாட்டிய விழாவில் கரகாட்டம், தப்பட்டம், காவடி, பொய்க்கால் குதிரை மற்றும் ஒயிலாட்டம் போன்ற முக்கியமான நாட்டுப்புற நடன வடிவங்களையும், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி போன்ற பாரம்பரிய நடன வடிவங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருகிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் அசோக் டோங்ரே, சுற்றுலாத் துறை இயக்குனர் அமுதவல்லி, செங்கல்பட்டு கலெக்டர் ஏ.ஜான் லூயிஸ், செங்கல்பட்டு கோட்டாச்சியர் செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அதிமுக காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி மரகதம் குமரவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம், மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகாணந்தன், மாமல்லபுரம் நகர செயலாளர் கணேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் க.ராகவன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் கௌஸ் பாஷா, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், செங்கல்பட்டு நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார், மாமல்லபுரம் சுற்றுலாதுறை அலுவலர் கக்திவேல் மற்றும் பல்வேறு உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.