திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ரகுநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அமலா இவர் கைலாசகிரி மலைப்பகுதி அடிவாரத்தில் பல ஆண்டுகளாக தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது நிலத்தில் நெல் பயிரிட்டு அதை அறுவடை செய்து நெல்மணிகளை பிரிப்பதற்காக அதை கட்டுகளாக கட்டிவைத்து இன்று இயந்திரம் வரவழைத்து அறுவடை செய்ய இருந்த நிலையில் நேற்று இரவு இவரது நிலத்தில் புகுந்த யானை கூட்டங்கள் நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நெல்களை மிதித்தும் வாரி அங்கேகாங்கே வீசியும் விளையாடி சென்றுள்ளது.இன்று காலை தனது நிலத்திற்கு வந்த அமலா நிலத்தில் நெல்கள் அங்காங்கே சிதறிகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களுக்கு தகவல் கூறியுள்ளார்.மேலும் இவரது நிலத்திற்கு மேல் அமைந்துள்ள இதே பகுதியை சேர்ந்த பலரது நிலத்தில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள்,கத்தரி செடிகள் மற்றும் தென்னஞ்செடிகளையும் யானை கூட்டம் சேதப்படுத்தியுள்ளது.மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாச்சம்பட்டு மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தை யானை கூட்டம் சேதப்படுத்திருந்த நிலையில் இன்று மறுபடியும் யானை கூட்டம் நிலப்பகுதியிற்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும் இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில் மலைப்பகுதியிலிருந்து வன விலங்குகள் நிலப்பகுதியிற்கு வருவதை தடுக்க மலைப்பகுதியின் அடிவாரத்தில் தடுப்பு வேலிகளும் அகழிகளும் அமைக்க வழியுறுத்தியும் இதுவரையில் அமைக்கப்படாததால் இதுப்போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது... மேலும் இனி வன விலங்குகள் நிலப்பகுதியிற்கு வராமல் தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சேதமடைந்த பயிர்களுக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.மேலும் சம்பந்தப்பட்ட நிலப்பகுதிகளை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆம்பூர் அருகே தொடரும் யானைகள் அட்டகாசம். விவசாயிகள் வேதனை.
• தமிழ் சுடர் காலை நாளிதழ்