மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு திருத்தத்திற்கு ஆதரவு அளித்தது திமுக. ஆனால் இப்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் குற்றச்சாட்டு.


சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,
மத்திய அரசு 50 வகை காரணிகளை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து தமிழகத்திற்கு சிறந்த ஆளுமை அந்தஸ்தை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி இதற்கு உதவிய அதிகாரிகள் அரசு ஊழியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறினார்.ஊரக உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான கேள்விக்கு.உள்ளாட்சித் தேர்தலின்போது வாக்குப்பதிவு மறைமுகமாகவே நடைபெற்றுள்ளது
யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானித்துள்ளனர்.
இதில் பயப்பட தேவையில்லை
திமுக தலைவர் ஸ்டாலின் தேவையின்றி அச்சப்பட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்
அதிமுகவைப் பொறுத்தவரையில் தேர்தல் நடைமுறையில் யாரும் தலையிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து ஆனால் ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் நாடகம் ஆடுகிறார்.தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பின்பற்றப்பட்ட வழிமுறைகளை தற்போதும் பின்பற்றப்படுகிறது.மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.இது 2003 ஆம் ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.காங்கிரஸ் ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஆட்சியில் அங்கம் வகித்தபோது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த திமுக இப்பொழுது வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.தமிழகத்தில் தற்போது தேசிய குடியுரிமை பதிவேடு கிடையாது.அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களை குழப்பி வருகிறார்கள் பொதுமக்களும் இளைஞர்களும் சிறுபான்மையினரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு புதிதாக 900 பேர் புதிதாக மருத்துவ படிப்பில் சேரும் வகையில் 9 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என்றும் கூறினார்.மேலும் மின் ஊழியர்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியை உள்ளதை கருத்தில் கொண்டு போராட்ட அறிவிப்பை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image