விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நடிகர் பாடகர்கள் மீது வழக்கு பதிவு.









நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


நேற்று உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டது.


மேலும் தமிழகத்திலும் பல இடங்களில் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு  போராட்டம் நடத்தினர்.


பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் நடிகர் சித்தார்த், பாடகர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  உள்ளிட்டோர் நேரில்  கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். 


இந்த போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் ன்று  வலியுறுத்தினர். 
இந்நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், நடிகர் சித்தார்த் மற்றும் பாடகர்  டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..




 





Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த மனிதநேயர் விருது.‌மாவட்ட ஆட்சியர் சிவனருள் வழங்கினார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ நல்லதம்பி..
Image