போராட்டத்தில் கலந்து கொண்ட  ஜெர்மனி மாணவர் விசா ரத்து. நாட்டைவிட்டு வெளியேற அரசு உத்தரவு.

 


சென்னை:-


குடியுரிமை திருத்த  சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.சென்னை ஐஐடியில் இயற்பியலில் முதுகலை பட்டம் பயின்று வருபவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர்.இவர் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.கையில் பதாகைகளை ஏந்தி தன்னுடைய எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்.
அதுகுறித்த விசாரணையில் ஜேக்கப் இந்தியாவில் தங்கி படிப்பதற்கான அனுமதியை குடியுரிமைத் துறை ரத்து செய்தது. இதையடுத்து ஐஐடியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டியளித்த ஜேக்கப் கூறியதாவது:-'


குடியுரிமைத்துறை அதிகாரிகள் என்னை அழைத்து  ஏன் போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என்று  கேள்வி எழுப்பினர்.
அப்போது தான் நான் கடுமையான விசாரணை வளையத்துக்குள் இருப்பது எனக்கு புரிந்தது. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் மாணவர் விசாவில் வந்திருக்கும் நீங்கள் படிக்க மட்டுமே அனுமதி என்றும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர்.இந்த போராட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டது அப்போது தான் எனக்கு தெரியும். மாணவர் விசாவில் வந்த நான் படிப்பைத் தவிர வேறு எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது குற்றமாகவே கருதப்படும் என்பதை தெரிந்துகொண்டேன். அதற்குப் பின் நீண்ட நேரம் பேசிய அதிகாரிகள் என்னை இந்தியாவை விட்டு வெளியேறச்சொன்னார்கள். நான் எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்தேன். ஆனால் அதிகாரிகள் ஏற்க மறுத்திவிட்டனர்'என தெரிவித்துள்ளார்.


Popular posts
வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..மார்ச் 5- 1931 - காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது.. தினம் இன்று..
Image
அதிமுக அரசு பொதுமக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகின்றது கிராம மக்களிடம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு..
Image
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image