திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் லாரிகளுக்கு பழுதுபார்க்கும் மற்றும் பாடி பில்டிங் ஒர்க் செய்யும் தொழில் செய்து வருபவர் குமார் இவருக்கு சொந்தமான பெருமாள் பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாடி பில்டிங் ஒர்க் ஷாப்பில் நேற்றிரவு புகுந்த திருடன் ஒருவன் சுமார் 70 ஆயிரம் மதிப்பிலான நான்கு லாரி பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்று உள்ளான் இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடு போன பொருட்களை கண்டுபிடித்து தர கோரி வாணியம்பாடி காவல் நிலையத்தில் மனு அளித்து உள்ளார்.
வாணியம்பாடியில் தொடரும் திருட்டு சம்பவங்கள் அச்சத்தில் பொதுமக்கள்.
• தமிழ் சுடர் காலை நாளிதழ்