காஞ்சிபுரம் அருகே இரண்டே மாதமான ஆண் குழந்தை சாலையோரம் மீட்பு. போலிசார் விசாரணை.


உலக அரங்கில்  இந்தியா வல்லரசு நாடாக வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல்வாதிகள் மட்டுமல்ல இளைஞர்களும் தங்கள் பணியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து தங்கள் துறையில் செயல்பட்டு வருகின்றனர்.  குறிப்பாக ஐடி எனப்படும் மென்பொருள் துறையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பகலிரவு பார்க்காமல் பணி செய்வதால் அவர்கள் சுமார் முப்பத்தைந்து வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை உருவாகுகிறது. தொடர் பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் அவர்களுக்குக் குழந்தைப்பேறு பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஆகின்றன. பல இளம் தம்பதிகள் பல லட்ச ரூபாய் செலவு செய்து மருத்துவமனை மூலம் செயற்கை முறையில் கருமுட்டைகள் பெற்று குழந்தைப்பேறு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்.சிலர் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்து தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நிலைமை இப்படி இருக்க  காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் நேற்று இரவு இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று அனாதையாக சாலை ஓரம் வீசப்பட்டு இருந்தது. அப்போது  குழந்தை அழும் சத்தம் கேட்டு  அவ்வழியே சென்ற பொதுமக்கள்  சாலையோரம் கிடந்த ஆண் குழந்தையை மீட்டு   சாலவாக்கம் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் நித்தியானந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு  முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் மூலம்  குழந்தையை சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது. இந்த ஆண் குழந்தையின் தாய் மற்றும் தந்தை யார் எதற்காக குழந்தையை சாலையோரம் வீசிவிட்டு சென்றனர். என்ற கோணத்தில் சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சாலை ஓரம் இரண்டு மாதங்களே ஆன ஒரு அழகான ஆண்குழந்தை வீசி விட்டுச் சென்ற  சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts
கந்திலி ராஜாவூர் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கொரோனா விழிப்புணர்வு..
Image
நாட்டறம்பள்ளியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் குருசேவ் தலைமையில் பாஜகவில் ஐக்கியம்..
Image
கந்திலி மண்டலநாயனகுண்டா பகுதியில் நகரும் ரேசன் கடை வாகனம் துவக்கம். அமைச்சர் வீரமணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Image
திருப்பத்தூரில் பாஜக சார்பில் மண்டல நிர்வாகிகள் ஆய்வு கூட்டம். மாநில பொதுச் செயலாளர் ராகவன் பங்கேற்பு.
Image
திருப்பத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
Image