நாகர்கோவில், ஆதித்யா பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் கேஸூவல் உடைகளுக்கான இந்தியாவின் முன்னோடி பிராண்ட் ஆலன் சோலி. இந்நிறுவனத்தின் சமீபத்திய பிரத்யேக பிராண்ட் ஷோரூம் நாகர்கோவிலில் துவங்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலின் கே.பி.சாலையில் அமைந்துள்ள இந்த ஷோரூம். ஆடவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக கலக்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஷோரூமின் திறப்பு விழாவில் பேசிய ஆலன் சோலி, சி.ஓ.ஓ திரு. அனில் எஸ்.குமார், “தமிழகம் எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தை. எங்களின் நிரந்தர வாடிக்கையாளர்களின் வரவேற்பால் ஊக்குவிக்கப்பட்டு, நாகர்கோவிலில் எங்கள் பிரத்யேக கடை திறக்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நகரின் மையத்தில் அமைந்துள்ள எங்கள் கடை, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஃபேஷன் உடைகளை வழங்கும்.” என்றார்.சமகாலத்துக்கு ஏற்ற புரட்சிகர வடிவமைப்பும், டிரெண்டிங்கான டிசைன்களுமாக உருவாக்கப்படும் உடைகளை வாடிக்கையாளர்கள் அணியும் போது, சிறந்த உணர்வை வழங்கும். உடைகளுக்கு பயன்படுத்தப்படும் மெட்டீரியலானது சுருங்கி விரியக்கூடியது. கச்சிதமான பிட் தரும். மேலும், பருத்தி டென்செல் மற்றும் பாலிஸ்டரின் கலவையாக தினசரி உபயோகத்திற்கு ஏற்றது. இதுதவிர, டெனிம்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் பதியப்பட்ட டீஷர்ட்டுகள் கிடைக்கும்.ஆரம்பக்கட்ட சலுகையாக, முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பரிசுகளை வழங்க ஆலன் சோலி முடிவு செய்துள்ளது. இந்த வாரம் முழுவதும் இந்த சலுகை தொடரும்.