இக்கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட வருவாய் அலுவலர் பரிந்துரைத்து மேல்நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவு பிறப்பித்தார்.
இக்கூட்டத்தில் திருப்போரூர் வட்டம். மானாம்பதி கிராமம் இருளர் இனத்தை சேர்ந்த 17 நபர்களுக்கு பட்டாவும், மதுராந்தகம் கோட்டத்தில் சாலை விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த 11 நபர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் நிவாரண தொகையும். செங்கல்பட்டு கோட்டம் சாலை விபத்தில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ரூ. 6,00,000 த்திற்கான நிவாரணத் தொகையும், மதுராந்தகம் வட்டம். சமு்க பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய உதவித் தொகை 6 நபர்களுக்கும். முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கும் மற்றும் இயற்கை இடற்பாடு மரணமடைந்தவர்களுக்கு ஈமச்சடங்கு உதவித் தொகை ஆணையும் வண்டலூர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ஆதரவற்ற விதவைத் தொகை ஆணையும் முன்னாள் படைவீரர் நல 2020 ஆம் ஆண்டிற்கான கொடி நாள் நிதி வசூல் 1,00,000 த்திற்கான காசோலையை தாம்பரம் வட்டாட்சியர் சரவணன் வழங்கினார்.
மேலும் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வண்டி 1 நபருக்கும், சக்கர நாற்காலி 1 நபருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கான சுய தொழில் செய்ய வங்கிக் கடன் மற்றும் மானியம் 3 நபர்களுக்கும், மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான மாதம் ரூ.1500/- வீதம் மாதந்தோறும் அனுப்பி வைத்திடும் பொருட்டு பராமரிப்பு உதவித் தொகைக்கான ஆணை 4 நபர்களுக்கும் ஆக மொத்தம் 9 பயனாளிகளுக்கு 1,62,900/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் க.பிரியா அவர்களால் வழங்கப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயகுமாரி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, வட்டாட்சியர்கள் செங்கல்பட்டு சங்கர், தாம்பரம் சரவணன், திருப்போரூர் செந்தில்குமார், செங்கல்பட்டு நகர வருவாய் ஆய்வாளர் பிரகாஷ்,ஆகியோர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.