செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி என்.வசந்தலீலா தலைமையில் நீதிதுறை, நிர்வாகதுறை, காவல்துறை ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜான் லூயிஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உமா மகேஸ்வரி, வழக்குகளின் துணை இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் செங்கல்பட்டு கண்ணன், காஞ்சிபுரம் சாமுண்டீஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் செல்வம், காவல் துணை கண்காணிப்பாளர் கந்தன் ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வழக்குகளை முடித்து அவர்களுக்கான உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படுத்துதல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் ஆலோசனை முகாம்கள் செயல்படும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை, செங்கல்பட்டு நகராட்சி, தாம்பரம் , நகராட்சி, வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், சட்ட கல்லூரி, கிளை சிறைச்சாலைகள் மற்றும் சட்ட ஆலோசனை முகவர்கள் உள்ள பள்ளிகளில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது, புதிய நீதிமன்ற கட்டிடம் அமைத்தல் ஆகியவை தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.